மைத்திரியும் சஜித்திடம் அடைக்கலம்!


புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் வெற்றி உறுதியாகிவருகின்ற நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை செவ்வாய்க்கிழமை அவரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பு பெரும்பாலும் கொழும்பில் நடைபெறலாம் என்று ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

தனக்கான சபாநாயகர் பதவியை வலியுறுத்தும் அவர் சம்மதித்தால் சஜித்திற்கான ஆதரவை வெளிப்படுத்தலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே மஹிந்த - கோட்டபாய, இரண்டையும் பிரித்தறியும் பக்குவம் பெரும்பான்மையினரிடம் அதிகம் உருவாகியுள்ளது. தங்கள் காலத்தில் கண்டிராத அரசியல் தலைவனாக மஹிந்தவை பார்த்த அவர்கள், அந்த இடத்தில் கோட்டபாயவை நினைக்கவில்லை. அதிரடி தீர்மானம் மட்டுமே கோட்டாவின் பிளஸ் என்றும், தலைமைத்துவம், பேச்சாற்றல், பிரச்சினைகளை கையாளும் திறன் ஏன் நாட்டினை திடமாக வழிநடத்தக்கூடிய தகுதி என்பன கோட்டாவிடம் பின்தங்கியுள்ளது என பெருன்பான்மையினர் நம்புகின்றனர். மஹிந்தவின் முகமூடிக்கு பின் தான் கோட்டா இன்னமும் நிற்கின்றார் தவிர தான் யார் என்று காட்ட அவரால் முடியவில்லை என்கின்றனர் அவதானிகள்.

அனைவரையும் சரியாக கையாளும் திறன் இல்லாமை, தப்பித்தவறி தேர்தலில் வென்றால் எதிராக வாக்களித்த சிறுபான்மையினர் பழிவாங்கப்படுவோமென்ற அச்சங்களே கோத்தாவின் தோல்விக்கு காரணமாகியுள்ளது.

No comments