சோறுதான் முக்கியமென்கிறார் குரே?


சமஸ்டி, சுயநிர்ணய உரிமை என்பவற்றினை விட சோறு தான் முக்கியமென வடமாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

இவைகளுக்காக போராடும் அதே நேரத்தில் துன்பப்பட்ட மக்களை மேலே தூக்கி விடுவதற்கான வாழ்வாதார அபிவிருத்திகளை செய்வதும் அவசியமானதெனவும் அவர் ஞானோபதேசம் செய்துள்ளார்.

பசியுடன் வாடும் மக்களால் சமஸ்டியை சாப்பிட முடியாது ஆகவே அது ஒருபுறம் இருக்க மறுபுறம் மக்களின் பொருளாதார அபிவிருத்திக்காக பாடுபடும் புதிய அரசாங்கம் ஒன்றினை அமைக்க வேண்டும். அதற்கு தமிழ் மக்கள் அனைவரும் மொட்டு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டியது இன்றி அமையாதது எனவும் வடமாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபை முன்னாள் உறுப்பினரான அகிலதாஸ் என்பவரால் அழைத்துவரப்பட்ட மக்களிடையே உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

No comments