தமிழினத்தை விற்கிறது கூட்டமைப்பு:திருமுருகன்!


நாவற்குழியில் அரச காணியில் ஐந்து வீட்டுத் திட்டமென்று தொடங்கி அந்தப் பகுதியில் மூன்று வீட்டுக் காணிகளைச் சேர்த்து விகாரைகள் கட்டினார்கள். எங்களுடைய அரசியல் தலைவர்களுமிருக்கிறார்கள். ஆனால், எனக்கு கவலை. இவர்கள் நாவற்குழியில் உண்ணாவிரதமிருந்திருக்கலாம். எங்களுடைய தமிழ்த்தலைவர்கள் இவ்வாறான செயற்பாட்டை எதிர்த்து நாவற்குழியில் உண்ணாவிரதமிருந்திருந்தால் நாங்களும் அவர்களுடன் சேர்ந்து உண்ணாவிரதமிருந்திருப்போம். ஆனால், அவ்வாறு எதுவும்  செய்யவில்லை என  சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் கேள்வியெழுப்பியுள்ளார். 
தற்போது இந்தவிவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்திலாயினும், ஏனைய இடங்களிலேயாயினும் குரலெழுப்பினால் யாரும் இதுதொடர்பில் கண்டு கொள்கிறார்களில்லை. விகாரைகள் அனைத்தும் கட்டி முடித்து விட்டார்கள். 
காங்கேசன்துறையில், தையிட்டியில் என எங்கு பார்த்தாலும் விகாரைகளே காணப்படுகின்றன. காங்கேசன்துறையில் ஒரு பிள்ளையார் கோயிலுக்கு முன்பாகவுள்ள அரசமரத்தின் கீழ் பிள்ளையாரை விடப் பெரிய புத்தர் சிலை வைத்துள்ளார்கள். நான் குறித்த கோயில் கும்பாபிஷேகத்திற்குச் சென்ற போது அங்கு வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை எடுக்க மாட்டோமெனக் கூறிவிட்டார்களெனச் சொன்னார்கள். இதனை நினைக்கும் போதெல்லாம் மிகவும் கவலையாகவிருக்கிறகலாநிதிதெனஆறு. திருமுருகன் தெரிவித்துள்ளார். 

No comments