சந்திரிகா எழுதிய கடிதம்?


தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு எந்தவொரு அநீதியையும் செய்யவில்லையெனவும், புதிய கட்சியொன்றை உருவாக்கிக் கொண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை அழிப்பதற்கு திட்டமிட்டது எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவே ஆகும் எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் போசகரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ள விசேட கடிதம் ஒன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவ்வாறு இருந்தும் மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக இதுவரையில் கட்சியினால் எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கையோ, வாக்கு மூலம் ஒன்றையோ பெற்றுக் கொள்ளப்பட வில்லையெனவும் அவர் தனது நீண்ட கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்

No comments