தேர்தல்:வைத்தியசாலைகளிற்கு விடுமுறையாம்?


தேர்தல் வாக்களிப்பு தினமான எதிர்வரும் சனிக்கிழமை கிளிநொச்சியில் உருத்திரபுரம், தருமபுரம், பூநகரி, ஜெயபுரம் பிரதேச அரச வைத்தியசாலைகள் இயங்காதென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் வைத்திய சிகிச்சைக்காக கிளிநொச்சி நகரிலுள்ள பொது வைத்தியசாலைக்கு வரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அங்கு பணியாற்றும் தென்னிலங்கை வைத்தியர்கள் வாக்களிப்பதற்காக மூன்று நாள் விடுமுறையில் செல்கின்றமையாலேயே இவ்வறிவித்தல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பிக்காத நிலையில் அவர்கள் விடுமுறையில் செல்லவுள்ளதால் இந்நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

No comments