நாடாளுமன்ற தேர்தல்:கொழும்பில் அவசர கூட்டம்!


தேர்தல் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் அவசர அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 4 ஆம் திகதி  காலை 10 மணிக்கு  கட்சிகளின் தலைவர்களை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுத்தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

மே 2ம் திகதியளவில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இச்சந்திப்பு நடைபெறவுள்ளது.

No comments