மே2:இலங்கை நாடாளுமன்ற தேர்தல்!



பொதுத் தேர்தலை மே மாதம் 2 திகதி நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஜனாதிபதி கோத்தாய ராஜபக்ச உரிய தரப்புகளுடன் ஆலாசனை நடத்தி வருவதாக அறிய முடிகிறது.

“ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த ஆணையை அடுத்து பொதுத் தேர்தலுக்கு உடனடியாகச் சென்று மக்களின் ஆணையுடன் புதிய அரசை அமைப்பதே தனது நோக்கம். எனினும் அரசியலமைப்புக்குக் கட்டுப்பட்டு இடைக்கால அரசை நியமிக்கப்படுகிறது” என்று ஜனாதிபதி நேற்றைய அமைச்சரவை பதவியேற்பின் போது குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் 2020 மார்ச் முதலாம் திகதியுடன் நாடாளுமன்றைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. அதனால் மார்ச் முதலாம் திகதி நாடாளுமன்றைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கான கட்டளையை ஜனாதிபதி வெளியிட்டால் 2020 மே 2ஆம் திகதி தேர்தலை நடத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனை ஜனாதிபதியால் கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, மகிந்த ராஜபக்சவை பிரதமராகக் கொண்ட தற்போதைய இடைக்கால அரசு மே 2ஆம் திகதிவரை பதவியிலிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments