வீடு போகின்றார் மகிந்த தேசப்பிரிய?


ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மஹிந்த தேசப்பிரியவிற்கு மிகவும் நெருக்கமானவர்களை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தேர்தலின் பின்னர் எந்தவொரு தேர்தலுக்கும் தான் தலைமை வகிக்கப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தற்போதே தனது இராஜினாமாக் கடிதத்தை எழுதி வைத்துள்ளதாக மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதித் தேர்தலுக்குப் முன்னர் மாகாண சபைத்தேர்தலை நடத்த முடியாமல் போனால் தனது பதவியினை இராஜினாமா செய்வேன் என மஹிந்த தேசப்பிரிய முன்னர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments