காற்று மாசினால் தவிக்கும் இந்திய தலைநகர்!

இந்தியத் தலைநகர் புதுடில்லி காற்றுத்தூய்மைக்கேட்டால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அங்குள்ள மக்கள் இதுவரை காணாத காற்றுத்தூய்மைக்கேட்டால் தவித்துப் போயிருப்பதாய்க் கூறப்படுகிறது அந்நாட்டு மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
காற்று மாசினால் டில்லி செல்லும்  வானூர்திகளும்  திசை திருப்பப்பட்டுள்ளதோடு சில தாமதமாகியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

புதுடில்லியில் ஆண்டுதோறும் குளிர்காலத்தில் 20 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் காற்றுத்தூய்மைக்கேட்டால் பாதிக்கப்படுகின்றனர்.
தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் புகை, போக்குவரத்தால் ஏற்படும் புகை, வேளாண்மைக்காக எரிக்கப்படும் நிலங்களிலிருந்து வரும் புகை ஆகியவை புதுடில்லியில் காற்றுத்தூய்மைக்கேட்டை உண்டாக்குகின்றன.
தற்போது காற்றில் தூசியின் அளவு அபாயகரமான அளவை எட்டியுள்ளது.
தூய்மைக்கேட்டைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக இந்தியக் கட்சிகள் ஒன்றையொன்று குறைகூறுகின்றன.

No comments