அரசியல் ஆதாயம் தேட சுதாகரன் வீட்டுக்கு சென்ற தயா

தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் வீட்டிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர சென்றுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று(செவ்வாய்கிழமை) விஜயம் மேற்கொண்டிருந்த தயாசிறி ஜயசேகர, அங்கு பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து கிளிநொச்சியிலுள்ள தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் இல்லத்திற்கு அவர் சென்றுள்ளார்.

ஆனந்த சுதாகரனின் இரண்டு பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருடன் தயாசிறி கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

தயாசிறியுடன் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் உடனிருந்தார்.

இதன்போது பொது மன்னிப்பு வழங்க ஒரு மாதம் எடுக்கும் சிறிசேனவின் பதவிக்காலம் நான்கு நாட்களே இருக்கும் என்று அங்கஜன் தெரிவித்தார்.

No comments