ஒழுக்காற்று நடவடிக்கையில் முன்னணி!


கட்சியின் கொள்கை நிலைப்பாடுகளை மீறி நடந்தனர் என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் ஜெயகாந்தன் மற்றும் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர் ந.விஜிதராஐன் ஆகியோர் மீது இன்று ஒழுக்காற்று குழுவால் ஒழுக்காற்று விசாரணை நடாத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

குறித்த ஒழுக்காற்று விசாரணைக்கு ந. விஜிதராஐன் வருகை தரவில்லை. ஜேயகாந்தன் மீதான ஒழுக்காற்று விசாரணை எமது கட்சியின் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. ஒழுக்காற்று குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் அதன் அடிப்படையில் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

ஜெயகாந்தன் பெரமுன கட்சியுடன் இணைந்து கொண்டார் என்று வெளியான செய்தி தொடர்பிலும், விஜிதராயன் உள்ளூராட்சி மன்ற தவிசாளர் தெரிவில் வேறு கட்சி ஒன்றுக்கு வாக்களித்தமை, கட்சியின் தீர்மானங்களை மீறியமை தொடர்பிலும் குற்றம் சாட்டப்பட்டதாகவும் தெரிவித்தார்.
ஜெயகாந்தன் முன்னாள் ஆளுநர் கலந்து கொண்ட கூட்டமொன்றிற்கு தமிழரசு கட்சி நபரொருவரால் அழைத்து செல்லப்பட்டதாக சொல்லப்படுகின்றது.

No comments