ரஜினி சொன்ன அதிசயம் விஜய்தான்! மதுரையில் பரபரப்பு;

நடிகர் கமல் ஹாசனின்  திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக உங்கள் நான் என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி  சமீபத்தில் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. விழாவில், நடிகர் ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குநர் ரஞ்சித்  உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும்  கலந்து கொண்டார்கள்.  

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், 'எடப்பாடி அவர்கள் முதல்வராக ஆவார் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் அவர் ஆட்சியின் நான்கு ஐந்து மாதங்கள் கூட தாங்காது என்றார்கள் ஆனால் ஆட்சி தொடர்கிறது நேற்று அதிசயம் நடந்தது இன்றும் அதிசயம் நடக்கிறது நாளையும் அதிசயம் நடக்கும்' என்றார். இது அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக அரசியலில் அதிசயம் நிகழும் அது நடிகர் விஜய்தான் என்று  அச்சடித்த போஸ்டர்கள் மதுரையில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டரில் ரஜினி - கமல் இருவரின் புகைப்படங்களுக்கு நடுவில் விஜய் புகைப்படம் இருப்பது போல அந்த போஸ்டர் அச்சடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

No comments