பாராட்டுக்குள்ளாகியது மந்திகை நலன்புரிச்சங்கம்!


மந்திகை வைத்தியசாலையில் பெரும் சிரமங்களை ஏற்படுத்தும் கட்டாக்காலி நாய்களை பாதுகாப்பான சரணலயத்திற்கு அனுப்புவதற்கு நலன்புரிச்;சங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இதற்கு சுகாதார அதிகாரிகள் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

மந்திகை நோயாளர் நலன்பரிச் சங்கமானது கடந்த மூன்று தசாப்தகாலமாக பல அளப்பரிய சேவைகளை நோயாளர் நலன் கருதி ஆற்றிவருகின்றது. அர்ப்பணிப்பான உறுப்பினர்கள் இச் சங்கத்தில் இருப்பதனால் நேரகாலம் பார்க்காமல் தொடர்ந்தும் தன்நலம் அற்ற சேவையை வழங்கி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

வைத்தியசாலை தலைமைத்துவம் அரச இடமாற்ற  நடைமுறைகளுக்கேற்ப காலத்திற்கு காலம் மாறினாலும்  இச் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் சங்க யாப்பு விதிகளுக்கு அமைவாகவே தங்கள் சங்க செயற்பாடுகளை சிறப்பாக ஆற்றிவருகின்றமை பலராலும் பாராட்டப்பட்டுள்ளது.

மேலும் கடந்த மாதம் மட்டும் இச் சங்கத்தினால் பல உட்கட்டுமான வேலைகளையும் பொறுப்பேற்று செயற்படுத்தப்பட்டமை பாராட்டிற்குள்ளாகியுள்ளது.  இவ்வேலைகள் சம்பந்தமாக தனியார் ஒப்பந்தகாரர்களிடம் பல முறை கேள்வி மனுப்பத்திரம் சமர்ப்பித்த பொழுதும் போதிய இலாபம் இல்லை எனக்கூறி கடந்த 10 மாதங்களுக்கு மேலாக வேலைகளை செய்யாமல் ஒப்பந்த காரர்களினால் காலம் தாழ்த்தப்பட்டிருந்தது.

இந்நிலையில்  வைத்தியசாலையின் அத்தியாவசிய நிலையினை கருத்தில் கொண்டு அவ் உட்கட்டுமான வேலையினை கூட சங்கம் பொறுப்பேற்று செய்துள்ளது. இதற்காக பலரது பாராட்டு சங்கத்திற்கு கிட்டியுள்ளமுள்ளது.

No comments