தமிழ் குறித்து இனவாதம் கக்கிய விமல்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர்ப்பலகை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தேர்தல் மேடையில் இனவாத ரீதியில் விமர்சனங்களை முன்வைத்தார்.

"பலாலி சர்வதேச விமான நிலையத்தின் பெயர்ப்பலகையில், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவதாக சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளது. மூன்றாவதாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. அரச மொழிக் கொள்கைக்கு அமைய, சிங்கள மொழியே முதலில் இருக்க வேண்டும். தமிழ் மொழி இரண்டாவதாகக் காணப்பட வேண்டும். தற்போது மொழிக் கொள்கைகள் இல்லாது போயுள்ளன" இவ்வாறு விமல் குறிப்பிட்டார்.

இதேவேளை, விமல் ஆதரவு வழங்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ். மாவட்ட கட்சி அலுவலகத்தின் பெயர்ப்பலகையிலும் முதலில் தமிழிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments