பெரமுனவின் தோல்வி நிச்சயம்- வெல்கம

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன நிச்சயம் தோல்வியை தழுவுமென நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற பொதுகூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பணக்காரர்களுக்கு ஒருபோதும் வாக்களிக்கப்போவதில்லையென குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
ஆனாலும், தனது ஜனநாயக உரிமையை நிச்சயம் நிறைவேற்றுவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உண்மையான உறுப்பினர்கள் தன்னுடன் இருப்பதனால், பொதுஜன பெரமுனவை நிச்சயம் தோல்வியடைய செய்வோம் எனவும் குமார வெல்கம் கூறியுள்ளார்.

No comments