மைத்திரி சஜித்துடன் கூட்டு?


ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நேற்று இடம்பெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்திருப்பதாக தெரிவிக்கப்டுகிறது.
நேற்று இரவு 9.30 மணியளவில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் சஜித் பிரேமதாச, அகில விராஜ் காரியவசம், கபீர் ஹஷீம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
குறித்த கலந்துரையாடல் பல மணி நேரங்கள் இடம்பெற்றுள்ளதுடன் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் இரு தரப்பினராலும் ஊடகங்களுக்கு எந்தவித கருத்துக்களும் வெளியிடப்படவில்லை
எனினும் குறித்த கலந்துரையாடல் மிகவும் சுமுகமான முறையில் வெற்றியளித்ததாக உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments