ரணிலும் நன்றியாம்?


ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்தும் தேசத்தின் வெற்றியை உறுதி செய்யும் வகையிலும் நடாத்தப்பட்ட இன்றைய கூட்டத்துக்கு வருகை தந்த மக்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிவித்தல் ஒன்றின் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் முதல் தடவையாக காலி முகத்திடலில் ஒன்று கூடிய நாட்டுப் பற்றுள்ள மக்களை தான் கௌரவமான முறையில் தலைவணங்குகின்றேன். மிகவும் வெற்றிகரமான முறையில் இக்கூட்டத்தை நடாத்துவதற்கு பங்காற்றிய கட்சியின் நிருவாக சபை, அமைச்சர்கள், தொகுதி அமைப்பாளர்கள் ஆகியோருக்கும் நன்றிகளை கூறிக் கொள்கின்றேன்.
இந்த ஆதரவை ஜனாதிபதித் தேர்தல் வெற்றி வரை கொண்டு சென்று உதவுமாறும் கேட்டுக் கொள்கின்றேன் எனவும்  தெரிவித்துள்ளார்.

No comments