தமிழக வேலை தமிழர்களுக்கே! மதுரை தொடரூந்து முற்றுகை;

தமிழ் நாட்டில் உள்ள தொடரூந்து சேவை பணிகளை வடநாட்டினருக்கு தாரை வார்ப்பதை எதிர்த்தும்,அனைத்து பணிகளும் தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக மதுரை தொடரூந்து  கோட்ட அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

பல்வேறு அமைப்புகள் பங்குபற்றிய இந்த போராட்டத்தை தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை.கு.இராமகிருட்டிணன் அவர்கள் தலைமை தாங்கினார், இதன்போது 500 மேற்பட்டோர் காவல்துறையினரால் கைதுசெய்து விடுதலை செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments