கஜாவுக்கு ஏதோ நோய் உள்ளது; முன்னணி சீனாவின் முகவர்களா?


தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், அந்த கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சீனாவின் முகவர்களாக செயற்படுகிறார்களா என்று பரபரப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளார் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

நேற்று (22) அவரது இல்லத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய பரப்பில் இருக்கும் ஐந்து கட்சிகள் இணைந்து 13 கோரிக்கைகளை  முன்வைத்து ஜனாதிபதி வேட்பாளர்களுடன் அவர்கள் கட்சிகளுடனும் கலந்துரையாட உள்ளனர். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், இலங்கை தமிழ் அரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய ஆறு கட்சிகளும் இணைந்துதான் இந்த ஆவணத்தை தயாரித்திருந்தனர்.

இன்னும் குறிப்பாக கூறினால், இதில் இருக்கக்கூடிய அத்தனை விடயங்களையும் தேசிய மக்கள் முன்னணியும் ஏற்றுக் கொண்டிருந்தது. அவர்கள் ஏற்றுக் கொள்ளாத ஒருவிடயமும் இதில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

தயாரிக்கப்பட்டுள்ள 13 கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தில் ஐந்து கட்சிகள் மாத்திரமே கையெழுத்திட்டன. ஆனால் ஆறு கட்சிகள் ஏற்றுக்கொண்ட ஆவணமாகத்தான் இது இருக்கிறது.

ஆவணத்தை இறுதிப்படுத்தும் நேரத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பல திருத்தங்களை கூறியுள்ளது. அவை உள்ளடக்கப்பட்டிருந்தன. அவ்வாறான சூழ்நிலையில் இந்த ஐந்து கட்சிகளும் இந்திய அரசாங்கம் சொல்வதைக் கேட்டுத்தான் இதனை செய்திருக்கின்றனர் என்று கூறுவதும், இந்திய அரசாங்கத்தின் முகவர்களாக செயல்படுகிறார்கள் என்று கூறுவதும் இவர்களது கருத்துக்களில் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

இந்த ஆவணத்தில் பல திருத்தங்களை சொன்னவர்கள் இவர்கள். ஆகவே இவர்கள் யார் சொல்லி இந்த திருத்தங்களை கொண்டுவந்தார்கள்?இந்தியா சொல்லித்தான் இவர்கள் இந்த திருத்தங்களை கொண்டு வந்தார்களா? இவர்கள் கொண்டுவந்த திருத்தங்களைத்தான் தற்போது இவர்கள் விமர்சிக்கிறார்கள். இந்த ஆவணத்தின் இவர்களது பங்குபற்றல் இருக்கின்றது.ஆகவே அவர்களும் ஏற்றுக் கொண்ட இந்த ஆவணத்தை விமர்சிப்பது தவறானது. இந்தியா என்று சொன்னால் ஒருவிதமா நோய் இவர்களுக்கு ஏற்பட்டு இருக்கின்றதா என்ற கேள்வி எழுகிறது.

நிச்சயமாக இவர்கள் கூறும் எல்லா விடயங்களையும் பார்க்கும்போது இந்தியாவின் வேலை, இந்திய மாணவர்களின் வேலை என்று கூறுவதும், அவர்கள் சொல்லி இவர்கள் செய்கின்றார்கள் என்று கூறுவதும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சீனாவின் முகவர்களாக இருக்கின்றீர்களா?

இவர்களை பொறுத்த வரையில் தொடர்ச்சியாக கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அவருடைய கட்சியினரும் இந்திய முத்திரையை எமக்கு குத்துவது ஏன் என்று விளங்கவில்லை.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு மிக மோசமான வருத்தம் நிச்சயமாக இருக்கிறது. இந்தியா என்று சொன்னால் அவருக்கு அத்தகைய வருத்தம் வருவதைப் போல்தான் இருக்கிறது. ஆகவே அவர் தன்னுடைய நிலைப்பாடுகள், உணர்வுகள் சரியா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது. காரணம் பல்கலைக்கழக மாணவர்கள்  ஆறு கட்சிகளை அழைத்து அவர்களுடன் கலந்துரையாடினார்கள். ஐந்து முறை கலந்துபேசி ஐந்தாவது முறை கையொப்பம் வைக்கும் சூழ்நிலைதான் இவர்கள் ஒரு கோரிக்கையை ஏற்கும் படி கூறினார்கள். அதனை பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணம் அனைவரும் ஏற்றுக்கொண்ட விடயம்தான். மீண்டும் செல்லப்போனால், ஆறு கட்சிகளும் ஏற்றுக்கொண்ட விடயமே இந்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments