சுஜித்துக்கு ஸ்ரீநேசன் இரங்கல்

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி, உயிரிழந்த இரண்டரை வயது குழந்தை சுர்ஜித்தின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென பிராத்திக்கின்றேன்  என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சுர்ஜித் உயிருடன் மீட்கப்பட வேண்டுமென உலகிலுள்ள  மனிதர்கள் அனைவரும் பிராத்தனை செய்தனர்.
அவர்களில் நானும் ஒருவன். ஆனால், சுர்ஜித்தை உயிருடன் மீட்க முடியவில்லை. அவரது சடலத்தினைத்தான் மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.
இருப்பினும் மீட்புக் குழுவினரின் முயற்சியை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. பாராட்டுகின்றோம். விதி விளையாடி விட்டதா? விஞ்ஞான தொழில்நுட்பம் சதி செய்து விட்டதா? என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது.
இந்நிலையில் சுர்ஜித்தின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று பிரார்த்திப்போடு,  அவரது பெற்றோர், சகோதர்கள், உறவுகளுக்கு இறைவன் ஆறுதலை வழங்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றோம்.
மேலும், பொறுப்பற்ற நிலையில் காணப்படுகின்ற ஆழ்துளைக்கிணறுகள் பாதுகாப்பாக்கப்பட வேண்டும். அல்லது முழுமையாக மூடப்பட வேண்டும்.
அத்துடன், இந்தியாவின் விஞ்ஞான தொழில்நுட்பம் மேலும் வினைத்திறன் மிக்கதாக்கப்பட வேண்டும். இலங்கை மட்டுமல்ல ஏனைய நாடுகளும் இவ்விடயத்தினை படிப்பினையாக்கிக் கொள்ள வேண்டும்.
இப்படியான அனர்தங்களில் இருந்து மக்களைப் பாதுகாக்க அனர்த்த முகாமைத்துவத்தினர் எச்சரிக்கையாக இருந்தாக வேண்டும். இழப்புகள் இயற்கையின் நியதியாக இருந்தாலும், எமது செயற்கையான நடவடிக்கைகளால் இழப்புகள் ஏற்படுத்தாமல் இருப்போமாக” என குறிப்பிட்டுள்ளார்.

No comments