சிவாஜியின் வேட்புமனுவை எதிர்த்த சீலரத்ன தேரர்

இன்று 35 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், இரண்டு மனுக்களுக்கு எதிராக எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டன.

சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிராக இந்த எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டன.

எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு எதிராக பத்தரமுல்லே சீலரத்ன தேரர் எதிர்ப்பினை முன்வைத்தாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, எம்.எல்.எம்.ஹிஸ்புல்லாவுக்கு எதிராக சரத் மனேமேந்திரா எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

எவ்வாறியினும், இந்த இரண்டு எதிர்ப்புகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவால் நிராகரிக்கப்பட்டன.

பத்தரமுல்லே சீலரத்ன தேரர் மற்றும்  ஞசரத் மனேமேந்திரா ஆகிய இருவரும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments