ஆயுதப் படைகளை கௌரவப்படுத்தும் நாட்டை உருவாக்குவேன்

இலங்கையின் பாதுகாப்பை அல்லது எதிர்காலத்தை பாதிக்கும் எந்தவொரு ஒப்பந்தத்திலும் நான் கையெழுத்திட மாட்டேன் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பார் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று (03) இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் 73-வது மாநாட்டில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

மேலும்,

இலங்கைக்கு நாட்டை நிர்வகிக்கும் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்கள் தேவை. சந்தேகத்திற்கு இடமின்றி இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்லும் அரசை உருவாக்க நாங்கள் உதவுவோம்.

நான் இலங்கையின் தேசியப் பாதுகாப்பை பலப்படுத்துவேன். உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளக் கூடிய ஒரு பாதுகாப்புப் பொறிமுறையை உருவாக்குவோம்.

ஆயுதப் படைகளை கௌரவமாக நடத்தும் நாட்டை நான் உருவாக்குவேன். நிச்சயமாக அவர்கள் தமது கண்ணியத்தை காத்துக் கொண்டு சுயாதீனமாக தங்கள் வேலையைச் செய்ய முடியும். - என்றார்.

No comments