மணியந்தோட்ட கொலை; தந்தை - மகன் மறியலில்

யாழ்ப்பாணம் அரியாலை மணியந்தோட்டத்தில் இளைஞர் ஒருவர் கோடாரியால் அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் தந்தையும் மகனும் பொலிஸில் சரணடைந்த நிலையில் நாளை (23) வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொலை செய்யப்பட்டவரின் மூத்த சகோதரியின் கணவரும் அவரது தந்தையும் தமது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை சரணடைந்தனர்.

அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் இன்று மாலை முற்படுத்தப்பட்டனர்.

இந்தக் கொலை தொடர்பான இறப்பு விசாரணை நாளை யாழ்ப்பாணம்  நீதிமன்றில் இடம்பெறவுள்ளதால் சந்தேகநபர்கள் இருவரையும் நாளைவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

No comments