அபு கொல்லப்பட்டமை குறித்து பிரதமர் மகிழ்ச்சி

இஸ்லாமிய அரசுப் பயங்கரவாதிகளின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டது குறித்து இலங்கை மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய அரசுத் தலைவர் பக்தாதி கொல்லப்பட்டதை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உறுதிப்படுத்திய சற்று நேரத்தில், பிரதமர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

உலகளாவிய பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான முயற்சிகளுக்காக, ட்ரம்ப் மற்றும் அமெரிக்க படையினருக்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

No comments