அரசியலுக்குத் தடை; Twitter நிர்வாகம் அதிரடி

சமூக வலைத்தள ஊடக நிறுவனமான Twitter, அரசியல் ரீதியான விளம்பரங்களை உலக அளவில் தடை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் அரசியல்வாதிகளால் பதிவிடப்படும் தவறான தகவல்கள் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையிலும்,
தவறான தகவல்களும் போலியான செய்திகளும் பரவுவதைத் தவிர்க்க அரசியல் ரீதியான விளம்பரங்களைத் தடைசெய்ய முடிவெடுத்ததாக Twitter நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் டோர்சி (Jack Dorsey) தெரிவித்தார்.

Twitter நிறுவனத்தின் போட்டி நிறுவனமான Facebook, அரசியல் விளம்பரங்களுக்கான தடையை அண்மையில் நீக்கியது.
அரசியல் விளம்பரங்கள்தான் பெரிய அளவில் சம்பாதிக்கமுடியும் என்ற நிலை இல்லை என்ற Facebook நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க் (Mark Zuckerberg), அனைவருக்கும் கருத்துகளைப் பகிர தளத்தைத் தருவது அவசியம் என்றார்.

Twitter-ரின் தடை அடுத்த மாதம் 22ஆம் தேதி தடை நடப்புக்கு வரும் என்றும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் அது குறித்த முழு விவரங்கள் பகிரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

No comments