ஜனாதிபதி வேட்பாளர்கள் இனவாதம் கக்குகின்றனர் குற்றச்சாட்டு

ஜனாதிபதி வேட்பாளர்கள் இனவாதம் மற்றும் மதவாதம் சார்ந்த கருத்துக்களை தெரிவித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

வேட்பாளர்கள் தெரிவிக்கும் குரோதத்தை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை பிரசாரம் செய்யாதிருக்க அனைத்து ஊடகங்கள் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவிக்கும் சில கருத்துக்களினால் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

No comments