கைகளில் இரத்தம் உள்ள கோத்தா தேவையே இல்லை

இது இளம் தலைவனின் வருகையை பதிவு செய்கிறது. எமது நாட்டின் வரலாற்றில் இது ஒரு திருப்புனை. ஐதேகவின் அனைத்து குழுக்களும் இணைந்து சஜித்தை இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளது என்று அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

இன்று (10) காலிமுகத்திடலில் நடைபெற்று வரும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கான பிரச்சாரக் கூட்டத்தில் சற்றுமுன்னர் தெரிவித்தார்.

மேலும்,

கோத்தாவிற்கு மக்களின் நாடித் துடிப்பு தெரியாது. இந்நாட்டின் மக்கள் தங்களுக்குள் இருந்து எழுந்த ஒரு மனிதனை ஜனாதிபதியாக தெரிவு செய்வார்கள்.

கைகளில் இரத்தம் இருக்கும் தலைவன் இந்நாட்டிற்குத் தேவையில்லை.

கோத்தா ஜனாதிபதியானால் மஹிந்த பிரதமராக இருப்பார். பசில், நாமல் அமைச்சரவையில் இருப்பார்கள். மற்ற உறவினர்கள் அனைவரும் உயர் பதவிகளில் இருப்பார்கள் என்பது எமக்குத் தெரியும். இத்தகைய குடும்ப அரசியலை நாட்டில் மீண்டும் உருவாக அனுமதிக்க முடியாது. - என்றார்.

No comments