சஜித்தின் வெற்றிக்காக கடுமையாக உழைப்பேன்

1988ம் ஆண்டில் இதேபோன்றதொரு காலப்பகுதியில் ஐக்கிய தேசியக்கட்சியின் மாநாடு நடைபெற்றது. இதன்போது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணசிங்க பிரேமதாச போட்டியிட வேண்டும் என்ற யோசனையை எனது தந்தையான காமினி திஸாநாயக்க முன்மொழிந்தார் என்று நவீன் திஸாநாயக்க தெரவிவித்தார்.

தற்போது நடைபெற்றவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் 75-வது மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும்,

எனது தந்தையான காமினி திஸாநாயக்க முன்மொழிந்த யோசனையை லலித் அத்துலத் முதலி வழிமொழிந்தார். 31 ஆண்டுகளுக்கு பின்னர் இதற்கு நிகரானதொரு நிலை வருமென யாராவது நினைத்திருப்பார்களா?. ரணசிங்க பிரேமதாசவின் மகனான சஜித் பிரேமதாச இன்று ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரின் பெயரை முன்னிலைப்படுத்தி பிரசாரம் முன்னெடுக்கும் பொறுப்பு காமினி திஸாநாயக்கவின் மகன் நவீன் திஸாநாயக்கவுக்கு கிடைத்துள்ளது.

எனவே, ஜனாதிபதியாக நாட்டையும், கட்சியையும் முன்நோக்கி கொண்டுசெல்லுமாறு சஜித்துக்கு அவரின் தந்தையும், மகனே நவீன், எனக்கும் பிரேமதாசவுக்கும்தான் இணைந்து செயற்பட முடியாமல்போனது. நீயும், சஜித்தும் இணைந்து செயற்பட்டு வெற்றி பெறுங்கள் என எனது தந்தையும் எம்மை ஆசிர்வதிப்பார்கள் என உணர்கின்றேன். சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக கடுமையாக உழைப்பேன். - என்றார்

No comments