விண்வெளியில் நடந்து மின்சாரப் பழுதுபார்த்த பெண்கள்!

அனைத்துலக விண்வெளி நிலைய மின்சாரக் கட்டமைப்பின் உடைந்துபோன பாகத்தை மாற்றிக் பெண்கள் குழு வரலாறு படைத்துள்ளது.

இதற்க்கு பாராட்டு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர்  டிரம்ப், கடந்த சுமார் அரை நூற்றாண்டில், விண்வெளி நிலையத்துக்கு வெளியே நடந்துசென்று பழுதுபார்ப்பில் ஈடுபட்ட குழுக்களில் ஆண்கள் அறவே இடம்பெறாதது இதுவே முதல் முறை என்றும் இந்த பெண்கள் குழு மேற்கொண்ட முயற்சி தைரியமானதும், அசாத்தியமானது எனக் கூறி பாராட்டியுள்ளார்.

அதற்கு நன்றி கூறிய விண்வெளி வீராங்கனைகள், பலண்டுப் பயிற்சிக்குப் பிறகு தங்களது வேலையைத்தான் செய்ததாக அடக்கத்துடன் குறிப்பிட்டனர்.
தங்களது முன்னோடிகளான அனைத்துப் பெண் விஞ்ஞானிகள், பொறியாளர்கள், விண்வெளி வீரர்கள் ஆகியோருக்கு அவர்கள் புகழாரம் சூட்டினர்.
இந்த முயற்சி வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டுக்குள் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையம் முதன்முறையாக அமெரிக்கர் ஒருவரை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பும் எண்ணம் கொண்டுள்ளது. 

No comments