மலேசியாவில் இந்தியர்கள், இலங்கையர் உள்பட 18 குடியேறிகள் அதிரடி கைது

மலேசியாவில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 18 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தேடுதல் வேட்டை பெராக்(Perak) மாநிலத்தில் உள்ள Semanggol என்ற பகுதியில் நடத்தப்பட்டுள்ளது.

இதில் கைது செய்யப்பட்ட 18 பேரில், 7 வங்கதேசிகள், 3 மியான்மரிகள்,  3 இந்தோனேசியர்கள், 2 நேபாளிகள், 2 இந்தியர்கள் மற்றும் ஒரு இலங்கையர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இவர்கள் பெனாங்கிலிருந்து கோலாலம்பூருக்கு சென்றுக்கொண்டிருந்த பொழுது கைது செய்யப்பட்டுள்ளனர். விடுமுறை என்பதால் கோலாலம்பூரில் உள்ள நண்பர்களை சந்திக்க அவர்கள் சென்றதாக தெரிவித்திருக்கின்றனர்,” எனக் கூறியிருக்கிறார் பெராக் குடிவரவுத்துறை இயக்குனர் கமால்லுதன் இஸ்மாயில்.

விசாயின்றி தங்கியது, முறையான ஆவணங்களின்றி மலேசியாவில் இருந்ததற்காக அவர்கள் மீது குடிவரவுச்சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பின்னர் இவர்கள் அனைவரும் நாடுகடத்தப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

No comments