நன்றி விசுவாசத்தின் உச்சத்தில் கோத்தா?


சிறையிலுள்ள ஏழு இலங்கை படைகளையே ஜனாதிபதியாகி தான் விடுவிக்கப்போவதாக கோத்தபாய தெரிவித்துள்ளார்.சில நாட்களுக்கு முன்னர் அனுராதபுரத்தில் பேசிய கோத்தபாயா ராஜபக்சே கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து இராணுவத்தினரையும் பதவிக்கு வந்து ஒரு நாளில் விடுதலை கூட நடத்தவில்லை. மாறாக குமாரபுரம் படுகொலை வழக்கு , திருகோணமலை மாணவர் படு செய்வதாக சொல்லியிருந்தார்.

ஆனால் உண்மையில் கடந்த 4 ஆண்டுகளில் தமிழரசு கட்சியின் தயவில் ஆட்சியில் இருக்கும் ஐக்கிய தேசிய கட்சி அப்பாவி தமிழரக்ளுக்கு எதிராக கொடூர கொலைகள் , கடத்தல்கள், கற்பழிப்பு ,கொள்ளைகளில் ஈடுபட்ட எந்த இராணுவ அதிகாரிகள் மீதோ அல்லது எந்த ஒட்டுக்குழு மீதோ விசாரணையைகொலை வழக்கு , ரவிராஜ் படுகொலை வழக்கு, அண்மைய விசுவமடு பாலியல் கொடூர வழக்கு என படையினர் சம்பந்தப்பட்ட எல்லா கொலை வழக்குகளிலில் இருந்தும் படையினர் நீதிமன்றத்தில் இருந்து விடுவிக்க பட்டு வருகிறார்கள்.

இன்றைய திகதியில் லசந்த விக்ரமதுங்க உட்பட 3 பத்திரிகையாளர் சம்பந்தமான வழக்குகள் ,சில கடத்தல் வழக்குகள் என தென்னிலங்கையில் நடைபெற்ற குற்ற வழக்குகளோடு தொடர்புபட்ட 48 ராணுவ அதிகாரிகள் மீது வழக்கு இருக்கிறது .அதில் 41 பிணை வழங்கப்பட்டு சிறைக்கு வெளியே இருக்கிறார்கள்.வெறும் ஏழு பேர் மட்டுமே சிறையில் இருக்கிறார்கள்.
இந்த ஏழு பேரை விடுவிப்பது பற்றி தான் கோத்தபாயா ராஜபக்ச தெரிவித்து இருக்கிறார்.

இவர்களிற்கான கொலை உத்தரவுகளை கோத்தபாயவே பிறப்பித்திருந்த நிலையில் அவர்கள் காட்டிக்கொடுக்க மறுத்துவருகின்றனர்.

அதற்காகவே கோத்தா அவர்களை விடுவிக்க ஆர்வம் கொண்டுள்ளார்.

No comments