சிறுவர்களுக்கு நீதி கோரி போராட்டம்

சர்வதேச சிறுவர் தினமான இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இறுதிபோரின் போது இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் குடும்பங்களுடன் காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகள் ,சிறுவர்களுக்கு என்ன நடந்தது ? இராணுவத்தால் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்ன நடந்தது? சர்வதேச சிறுவர் தினத்தில் காணாமல் ஆக்கபட்ட தமிழ் குழந்தைகளுக்கு நீதி கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது இறுதிபோரின் போது இலங்கை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கபட்டு காணாமல் ஆக்கப்பட்டதும் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகள், சிறுவர்களின் விபரம் அடங்கிய ஆவணம் ஒன்றும் இதன்போது வெளியிட்டுவைக்கப்பட்டது .

இந்த கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு கிழக்கு பகுதியில் பல்வேறு இடங்களில் இன்றையதினம் சம நேரத்தில் முன்னெடுக்கபட்டிருந்தது. போராட்டத்தின் இறுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையருக்கு அனுப்பிவைப்பதற்கான மகஜரும் வாசிக்கப்பட்டது.
No comments