வெள்ள அனர்த்தம்: 238 பேர் இடம்பெயர்வு

ஹட்டன் - பொகவந்தலாவ பகுதியில் பெய்து வரும் அடை மழை காரணமாக பொகவந்தலாவ கொட்டியாகலை மற்றும் தெரேசியா ஆகிய தோட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 49 குடும்பங்களை சேர்ந்த 238 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

வெள்ளத்தினால் 38 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் உயிராபத்துகள் எதுவும் இல்லையெனவும், சில பொருட்கள் மட்டும் சேதமாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

No comments