சுதந்திரபுரத்தில் மனித எச்சங்களை மீட்கும் பணி தொடங்கியது

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் கிராம பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் கடந்த 20ம் திகதி அடையாளம் காணப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த மனித எச்சங்களை முல்லைத்தீவு நீதிமன்றின் அனுமதியுடன் நீதவான் முன்னிலையில் மீட்க்கும் நடவடிக்கைகள் இன்று (25) முன்னெடுக்கப்பட்டன.

சுதந்திரபுரம் கிராம பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் ஒருபகுதியில் மண்எடுத்து மறுபகுதியில் கொட்டியபோது மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கடந்த (20) அன்று அடையாயம் காணப்பட்டிருந்தன. இந்த நிலையில் குறித்த பகுதிக்கு கடந்த சில நாட்களாக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

மனித எச்சங்களை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார், சட்டமருத்துவ அதிகாரி றெகான் ஹேரத்,சட்ட வைத்திய நிபுணர் இளங்கோவன், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக ஆணையாளர்கள் மிராட் றஹீம், க.வேந்தன், பிரதீபா புண்ணியமூர்த்தி மற்றும் தடயவியல் பொலிஸார் முன்னிலையில் மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

முதல் கட்டமாக மேல் வெளிப்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் மேலும் குறித்த பகுதியில் அகழ்வு பணிகளை முன்னெடுப்பது குறித்து நீதிமன்றி ன் கட்டளையின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக சட்ட வைத்திய நிபுணர் தெரிவித்தார்.

No comments