நாய்க்கு குவியும் பாராட்டுக்கள்!

ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அல் அபுபகர் அல் பாக்தாதி அக்டோபர் 26 ஆம் தேதி இரவு சிரியாவில் அமெரிக்கப் படைகளின் தாக்குதலின் போது தற்கொலை அங்கியை வெடிக்கச் செய்து மரணம் அடைந்தார் என அமெரிக்க அறிவித்தது.

இந்நிலையில் ஐ. எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியை (Abu Bakr al-Baghdadi) சுரங்கத்துக்குள் துரத்திச் சென்று சிக்கவைத்த ராணுவ மோப்ப நாய்க்கு, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் புகழாரம் சூடியுள்ளார்.
மோப்ப நாயை "அழகான நாய்" என அவர் வருணித்தார்.
தமது இருப்பிடத்தைக் கண்டுபிடித்த ராணுவ அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க முயன்ற பக்தாதியைத் துரத்திச் சென்று அவரை, அந்த வளாகத்துக்குள் இருந்த சுரங்கத்துக்குள் சிக்கவைத்தது மோப்ப நாய் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments