புலி ஆதரவும் ஈழ ஆதரவும் ஒன்றல்ல பயங்கரவாத தடுப்புபிரிவு தலைவர்
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தருவது என்பதும் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு என்பதும் ஒன்று அல்ல என்று மலேசியாவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தலைவர் அயூப்கான் பிச்சை தெரிவித்தார் என சர்வதேச செய்திகள் கூறுகின்றன.
மலேசியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அந்நாட்டின் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவர் அயூப் கான் மொய்தீன் பிச்சை கூறியதாவது,
ஈழத் தமிழர்களுக்கு அனுதாபம் காட்டுவதும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தருவதும் ஒன்று அல்ல. பலஸ்தீனத்தின் மீது அனுதாபம் காட்டலாம். ஆனால் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவு தருவதை ஏற்க முடியாது. செயல்படாமல் இருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி உதவி அளித்தது. நிதி திரட்டியது என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளுக்கு வீரவணக்கம் நிகழ்ச்சியை நடத்திய 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டோரில் சமூக வலைதளங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பதிவிட்டவர்களும் உண்டு. அவர்களிடம் இருந்து புலிகள் இயக்க கொடிகள், புத்தகங்கள், போஸ்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளுடன் யார் தொடர்பு வைத்திருந்தாலும் கைது செய்யப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சட்டத்தின் அடிப்படையில்தான் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதே தவிர யாரையும் பலவீனப்படுத்த அல்ல என மலேசியா பிரதமர் மகாதீர் விளக்கம் அளித்திருக்கிறார். இக்கைது நடவடிக்கையானது முழுவதும் பொலிஸாரால் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. சட்டத்தின் அடிப்படையில்தான் நடைபெற்றது.
இதில் அரசு எந்த விதத்திலும் தலையிடவில்லை. எந்த ஒரு தரப்பையும் பலவீனப்படுத்த வேண்டும் என்கிற நோக்கம் எதுவும் இல்லை என்றார்.
முன்னதாக வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டிருக்கிறது. அதில் 2 அமைச்சர்கள் பொலிஸாரின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்திருக்கின்றனர்.
இந்த கைது நடவடிக்கை குறித்து அமைச்சர் வேதமூர்த்தி கூறுகையில், இப்பிரச்சனையில் உண்மை என்ன என்பது நீதிமன்றத்தில் தெரியவரும் என்றார்.

Post a Comment