யாழ் விமான நிலையம் திறப்பு விழாவுக்கு தயாரானது

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், பொது மக்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
பலாலி விமான நிலையம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டு நாளை முதல் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்படவுள்ளது.
இந்நிலையில், விழாவுக்கான ஏற்பாடுகளை மறுஆய்வு செய்வதற்காக இன்று (16) யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு அமைச்சர் அர்ஜுனா ரனதுங்க நேரடி விஜயத்தை மேற்கொண்டார்.
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் இலங்கை முழுவதிலும் மட்டுமல்லாமல் இந்திய பிராந்தியத்திலும் விமான பயணத்திற்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று அமைச்சர் இதன்போது கூறினார்.
இங்கிருந்து வாரத்திற்கு 7 தடவைகள் சென்னைக்கு விமான சேவைகள் முன்னெடுக்கப்படும் என்றும் இதற்கான பேச்சுக்களில் தற்போது இரண்டு தரப்பினரும் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முதன் முதலாக இந்தியாவின் விமானமொன்று தரையிறங்கியிருந்தது.
இதில், இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை, சமிக்ஞைகள் உள்ளிட்டவற்றை ஆராயவதற்காக இந்தியாவின் விசேட குழுவொன்றும் வருகைத் தந்திருந்தது.
இந்த நிலையில், நாளை நடைபெறவுள்ள விமான நிலையத்தின் திறப்பு விழாவில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

No comments