பாதுகாப்பு கேட்கிறார் சிவாஜி:துரோகமென்கிறார் சீ.வீ.கே?


கூட்டமைப்பின் பிரமுகரான சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது அரசியல் தற்கொலை முயற்சியென அவரது கட்சி சார்ந்தவர்களால் பிரச்சாரப்படுத்தப்பட்டுவருகின்ற நிலையில் தனக்கு விசேட பாதுகாப்பினை அவர் கோரியுள்ளார்.

வடமாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரனுக்கும் தனக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனக் கோரி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு; எம்.கே.சிவாஜிலிங்கம் கடிதம் அனுப்பியுள்ளார்.

மேற்படி கோரிக்கைக்கமைய, குறித்த இருவருக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு, தேர்தலுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது

இதனிடையே கோட்டாபய ராஜபக்சவை வெற்றிபெறச் செய்வதற்காகவே, சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் போன்றோர் கோட்டாவிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, ஜனாதிபதித் தேர்தலில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளதாக, வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் கட்சி கொள்கையை கைவிட்டு நடந்து கொள்வதாகவும் குறிப்பாக சிவாஜிலிங்கம், டெலோவில் இருந்துகொண்டு, இவ்வாறு நடந்து கொண்ட விதம் ஏற்றுக்கொள்ள முடியாததெனவும் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

No comments