ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதரவு, ஈழ தமிழருக்கு எதிர்ப்பா!

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு என்ற பேரில் மலேசியாவில் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 7 பேர் பயங்கரவாத தடுப்பு காவல்துறையுனரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்;
தொடர்ந்து ஈழப்போராட்டத்திற்கு ஆதரவளித்து வரும் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி வேண்டுமென்றால் என்னை கைது செய்து கொள்ளுங்கள். நான் அடைக்கலம் தேடி தலைமறைவாகிக் கொள்ளப் போவதில்லை என  தெரிவித்துள்ளார்.
தான் ஒரு தீவிரவாதி என்று கூறி தமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் ஸாக்கிர் நாய்க்கும் அவரது சீடர்களும் தீவிரமாக முயற்சித்து வருவதாக ராமசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
10 வருடத்திற்கு முன்பு அமைதி பேச்சுக்காக ஶ்ரீ லங்கா சென்ற படத்தை அவர்கள் திரும்ப பயன்படுத்தி வருகின்றனர்.
ஸாக்கிர் நாய்க்கை இந்தியாவிற்கு திரும்பி அனுப்ப வேண்டும் என கடுமையாக வலியுறுத்தி வந்ததால் சிலர் அதிருப்தி அடைந்து என் மீதும் ஶ்ரீ லங்கா தமிழர்களுக்கு அனுதாபம் காட்டியவர்கள் மீதும் இதுபோன்ற கட்டுக்கதையின் வழி களங்கம் ஏற்படுத்த முயன்றுள்ளனர்.
நமது அரசாங்கம் ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதரவளிக்கின்றது. ரோஹிங்யா முஸ்லீம்களுக்கு அனுதாபம் தெரிவிக்கிறது. அந்த வகையில் தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தால் அது சட்ட விரோதமாகுமா என கேட்டார் ராமசாமி. ஆச்சே, கொலும்பியா, மின்டானாவ் மற்றும் ஶ்ரீ லங்காவிற்கு அமைதி தூதுவராக பணியாற்றியுள்ள தாம் எந்நேரத்திலும் ரத்தம் சிந்தும் போராட்டத்திற்கு ஆதரவளித்ததில்லை என மேலும் ராமசாமி மேலும் கூறினார்.

No comments