பிரான்சு மட்டத்தில் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் நடாத்திய திருக்குறள்திறன் இறுதிப் போட்டிகள்!

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் பிரான்சில் தமிழ்ச்சோலைப் பள்ளிமாணவர்களிடையே வருடாந்தம் நடாத்தப்படும் திருக்குறள்திறன் போட்டிகளின் இறுதிப்போட்டிகள் பிரான்சு மட்டத்தில் இன்று (20.10.2019) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு பொண்டி தமிழ்ச்சோலை மண்டபத்தில் அகவணக்கத்தோடு ஆரம்பமாகி இடம்பெற்றன.

திணைக்களமட்டத்தில் நடாத்தப்பட்ட திருக்குறள் திறன் போட்டிகள் கடந்த (29.09.2019) ஞாயிற்றுக்கிழமை பொண்டி தமிழ்ச்சோலை மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றிருந்தன.
முன்னதாக தமிழ்ச்சோலைப் பள்ளிகளிலே பள்ளிமட்டத்தில் நடாத்தப்பட்ட திருக்குறள் திறன்போட்டிகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களே குறித்த திணைக்களமட்டப் போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.
திணைக்களமட்டப் போட்டிகளில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களே பிரான்சு மட்டத்திலான திருக்குறள் திறன்போட்டிகளில் பங்குகொண்டிருந்தனர்.
பிரான்சு மட்டத்தில் இன்று இடம்பெற்ற போட்டிகளில் மாணவர்கள் மிகவும் ஆர்வத்தோடு கலந்துகொண்டதைக் காணமுடிந்தது.
அதேவேளை, இதில் வெற்றிபெறும் மாணவர்களுக்கான மதிப்பளிப்பு தமிழ்ச்சோலை முத்தமிழ் விழாவில் நடைபெறும் என்று தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் தேர்வு நடத்துநர் தெரிவித்துள்ளார்.
பிரிவு ரீதியில் போட்டி முடிவுகள் வருமாறு:-
அதிபாலர் பிரிவு
முதலாம் இடம்: குகநேசன் நிஸ்விகா (நொய்சியல் தமிழ்ச்சோலை)
இரண்டாம் இடம்: நகுலேஸ்வரன் ஷயதீப் (சோதியா கலைக் கல்லூரி)
மூன்றாம் இடம்: சுதன் இலக்குமி (வில்நெவ் சென் ஜோர்ஜ் தமிழ்ச்சோலை)
அரிகரன் சோகித் (ஸ்ரார்ஸ்பேர்க் தமிழ்ச்சோலை)
பாலர் பிரிவு
முதலாம் இடம்: நகுலேஸ்வரன் தர்ஷானி (சோதியா கலைக் கல்லூரி)
இரண்டாம் இடம்: யோகதாசன்; அக்ஷி (வெர்சைல் தமிழ்ச்சோலை)
மூன்றாம் இடம்: அறிவழகன் காயத்திரி (பொபினி தமிழ்ச்சோலை)
கீழ்ப் பிரிவு
முதலாம் இடம்: பாலசுரேஸ் கயலினி (வல்த்து ஈரோப் கலைக் கல்லூரி)
இரண்டாம் இடம்: குணரத்தினம் மதுஷங்கா (சுவாசி லு ரூவா தமிழ்ச்சோலை)
மூன்றாம் இடம்: பரந்தாமன் கிஷோர் (பரிஸ் 15 தமிழ்ச்சோலை)
நடுவண் பிரிவு (அ)
முதலாம் இடம்: பாலகுமாரன் கவிசா (இவ்றி தமிழ்ச்சோலை)
இரண்டாம் இடம்: கோல்பேட் சதீஸ் ஜொகானா (வில்நெவ் சென் ஜோர்ஜ் தமிழ்ச்சோலை)
மூன்றாம் இடம்: பரந்தாமன் ராதை (பரிஸ் 15 தமிழ்ச்சோலை)
நடுவண் பிரிவு (ஆ)
முதலாம் இடம்: அகிலன் அஷ்வின் (லாக்கூர்நொவ் தமிழ்ச்சோலை)
இரண்டாம் இடம்: சுபச்சந்திரன் தாருணிகா (பொபினி தமிழ்ச்சோலை)
மூன்றாம் இடம்: நிக்சன் றஞ்சித்குமார் யோணபாக் தேவஅமிர்தா (ஷெல் தமிழ்ச்சோலை)
மேற்பிரிவு (அ)
முதலாம் இடம்: சுபச்சந்திரன் சுஸ்மிதா (பொபினி தமிழ்ச்சோலை)
இரண்டாம் இடம்: ரவிச்சந்திரன் சிவாயினி (கிளிச்சி தமிழ்ச்சோலை)
மூன்றாம் இடம்: கலைச்செல்வன் அஸ்வினா (பொண்டி தமிழ்ச்சோலை)
மேற்பிரிவு (ஆ)
முதலாம் இடம்: பரமேஸ்வரன் சுஜிந்ரன் (பரிஸ் 17 தமிழ்ச்சோலை)
இரண்டாம் இடம்: முருகையா விசாலி (ஓல்னே சுபுவா 1 தமிழ்ச்சோலை)
மூன்றாம் இடம்: மகேந்திரன் சதர்சிகா (சுவாசி லு ரூவா தமிழ்ச்சோலை)
உயர் பிரிவு
முதலாம் இடம்: முருகதாஸ் ஜதுர்ஷ்னா (லாக்கூர்னொவ் தமிழ்ச்சோலை)
இரண்டாம் இடம்: தனபாலன் பர்மிகா (கிளிச்சி தமிழ்ச்சோலை)
மூன்றாம் இடம்: பொனவென்சர் திரேசா கரிசினி (நெவர் தமிழ்ச்சோலை)
அதி உயர் பிரிவு
முதலாம் இடம்: ராஜகோபால் திபனி (ஷெல் தமிழ்ச்சோலை)
இரண்டாம் இடம்: பிளசிற்யோகராஜ் சன்ரீனா (கிறித்தைல் தமிழ்ச்சோலை)
மூன்றாம் இடம்: சிறகாந்தராசா தமிழருவி (குசைன்வீல் தமிழ்ச்சோலை)No comments