சமல் ராஜபக்ச தனித்து போட்டி?சிறிலங்கா அதிபர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவும், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் போட்டியிடவுள்ளனர்.
அதிபர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களாகப் போட்டியிடுவதற்காக, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் இருந்து இவர்கள் இருவரும் இன்று உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெற்றுள்ளனர்.
கோத்தாபய ராஜபக்சவின் குடியுரிமை வழக்கில் பாதகமான தீர்ப்பு அளிக்கப்பட்டால், பொதுஜன பெரமுனவின் சார்பில் அவர் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.
அவ்வாறான நிலை ஏற்பட்டால், மாற்று ஏற்பாடாக சமல் ராஜபக்சவை சுயேட்சை வேட்பாளராக பொதுஜன பெரமுன நிறுத்த திட்டமிட்டுள்ளது.
அதேவேளை, சுதந்திரக் கட்சி வேட்பாளரை நிறுத்தாவிட்டால், தாம் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாக குமார வெல்கம நேற்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments