விரைவில் துருக்கி பயணம், பொருளாதார தடையையும் நீக்கம்!

துருக்கி மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை விலக்கிக் கொள்ள உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

சிரியாவில் இஸ்லாமிய அரசு பயங்கரவாதிகளை அடக்க அந்நாட்டுக்குச் சென்ற அமெரிக்க ராணுவம் எல்லையில் உள்ள குர்திஷ்களுக்கு  பாதுகாப்பு அளித்து வந்தது.  பயங்கரவாதிகள் முழுமையாக அடக்கப்பட்ட நிலையில் அமெரிக்கப் படைகள் திரும்ப அழைத்துக் கொள்ளப்பட்டன.
இதை அடுத்து சிரியா நாட்டின் எல்லையில் வசிக்கும் குர்துகள் மீது துருக்கி கடும் தாக்குதல் நடத்தியது.   இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.  லட்சம் பேருக்கு மேல் அஞ்சி அங்கிருந்து ஓடித் தலைமறைவாகி உள்ளனர்.   துருக்கியின் இந்த நடவடிகைகக்ளை கண்டித்து அமெரிக்கா அந்நாட்டுக்கு பொருளாதாரத் தடை விதித்தது.

இந்த தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வரத் துணை அதிபர் மைக் பென்ஸ் தலைமையில் சென்ற அமெரிக்கக் குழு துருக்கி சென்று பேச்சு வார்த்தை நடத்தியது   அதையொட்டி குர்துக்கள் மீதான தாக்குதலை துருக்கி நிறுத்தியது.
இதனால் துருக்கி மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விலக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.   மேலும்  சண்டை முடிவடைந்ததால் எண்ணற்ற உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகத் தெரிவித்த அதிபர் டிரம்ப் விரைவில் துருக்கி அதிபர் தயிஃப் எர்டோகனை சந்திக்க உள்ளார்.

No comments