விமான நிலையம்:தமிழீழம் மலர்ந்தது?


யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அமைத்துள்ளதன் மூலம் நாட்டை ஏற்கனவே பிரித்து விட்டார்களோ? என ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனசெத பெரமுனவின் தலைவரான பத்தரமுல்ல சீலாரத்தன தேரர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே வடக்கில் விமான நிலையமொன்றை அமைக்கத் தொடங்கி விட்டார். இதன்மூலம் இந்தியாவையும், இலங்கையையும் இணைக்க முடியும். அவர்கள் ஏற்கனவே நாட்டைப் பிரித்து விட்டார்களோ? எனும் தீவிரமான சந்தேகத்தை இது ஏற்படுத்தியுள்ளது.
பல ஆண்டு காலமாக கட்டுநாயக்க விமான நிலையம் வழியாகச் சென்றவர்கள் இனி பலாலி விமான நிலையம் வழியாகச் செல்வார்கள் எனவும் ஆவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

No comments