யாழ்ப்பாண தமிழ் சங்கம் நடத்திய தனிநாயகம் அடிகள் நினைவரங்கம்!

யாழ்ப்பாணத் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நினைவரங்கம் யாழ். திருமறைக் கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் தமிழ சங்க உப தலைவர் அருட்பணி ஜெறோ செல்வநாயகம் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.


நிகழ்வில் தனியாகம் அடிகளின் உருவச்சிலைக்கு அருட்பணி ஜெறோ அடிகளாரும் தமிழ்ச்சங்கத் தலைவர் ச.லலீசனும் மலர் மாலை அணிவித்தனர்.

சியன தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் சி. கேசவன் நினைவுப் பேருரையாற்றினார். தமிழ் சங்கம் நடத்திய விவாதப் போட்டிக்கான இறுதிப் போட்டியும் நடைபெற்றது.

நிகழ்வில் தமிழ்ச் சங்க தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ், கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், யாழ். மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் , தமிழ்ச்சங்கப் பொருளாளர் பேராசிரியர் தி.வேல்நம்பி, செயலாளர் விரிவுரையாளர் ,.சர்வேஸ்வரா, அகில இலங்கை இந்து குருமார் அமைப்பின் தலைவர் சிவஸ்ரீ வைத்தீஸ்வரக் குருக்கள், தமிழகப் பேச்சாளர் கலாநிதி வே.சங்கரநாராயணன் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பல்கலைக்கழக, ஆசிரிய கலாசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

No comments