வவுனியா மக்களுக்கான அறிவித்தல்! அமுலாகிறது நீர் வெட்டு!

நாளை முதல் நாளாந்தம் காலை ஐந்து மணி முதல் காலை 9 மணி வரையும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணியும் வரையான காலப்பகுதியினுள் வவுனியா மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.

நிலவும் வரட்சியால் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்துள்ளமையே இதற்கான காரணம் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதன்காரணமாக வவுனியா நகர், யாழ்ப்பாண வீதி, இறம்பைக்குளம், வைரவர்புளியங்குளம், தேக்கவத்தை, விநாயகபுரம், தோணிக்கல், மதவவைத்தகுளம், கோயில்குளம். நெலுக்குளம், மடுகந்த, தெற்கிலுப்பைக்குளம் ஆகிய பகுதிகளில் நீர் விநியோக தடை ஏற்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

No comments