16 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு விளக்கமறியல்


மட்டக்களப்பு தலைநகர் பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் குழந்தைக்கு தாயானதையடுத்து அந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 51 வயதுடைய தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் ஏ.சி.றிஸ்வான் நேற்று (09) உத்தரவிட்டார்.

மட்டு திருகோணமலை வீதியிலுள்ள ஒரு தனியார் காப்புறுதி நிறுவனத்தில் களுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதும் 8 மாதங்களும் உடைய சிறுமி ஒருவர் கடமையாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் குறித்த சிறுமியை அந்த நிறுவனத்தின் முகாமையாளர் பாலியல் துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாகியுள்ளார்.

இதணையடுத்து கற்பம் தரித்த சிறுமி கடமையில் இருந்து விலகி வீட்டில் இருந்துள்ள நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மட்டு போதனா வைத்தியசாலையில் சிறுமிக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நிலையில் சிறுமி தான் கர்ப்பமாக காரணம் குறித்த முகாமையாளர் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த ஊறணி பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய நிறுவன முகாமையாளரை பொலிஸார் நேற்று (09) கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 24 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

No comments