தொடங்கியது பிரச்சாரம்: கூட்டமைப்போ இரகசியமாம்?


வடகிழக்கு தமிழர் தாயகத்தில் ஜக்கிய தேசியக்கட்சி தனது சஜித்திற்கான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது.அமைச்சர் விஜயலா மகேஸ்வரன் சகிதம் பல இடங்களிலும் பிரச்சார சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

இதனிடையே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எவரும் எதிர்பார்க்காத முடிவையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எடுக்கக் கூடுமெனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

பிரதான மூன்று கட்சிகளின் வேட்பாளர்களுடனும், அந்தக் கட்சித் தலைமைகளுடனும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தனித்தனியாகப் பேச்சு நடாத்துவதற்குத் தயாராகியிருக்கின்றது. 

அத்துடன் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகத் தமிழ்மக்களின் கருத்துக்களையும் கேட்டறிவோம். அவசரப்பட்டுத் தீர்மானம் எடுக்க மாட்டோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சுமந்திரனது வேண்டுகோளின் பேரிலேயே கோத்தபாயவுடனான இரகசிய சந்திப்பை ஏற்கனவே கூட்டமைப்பு நடத்தியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments