ரணிலோடு கல்கொட்டும் அரசியலில் சுமந்திரன்?



அடுத்த ஜனாதிபதி தேர்தலிற்கு தெற்கு தயாராகி வர மீண்டும் தமது நாடாளுமன்ற கதிரையேறும் அரசியலிற்கு கூட்டமைப்பு தயாராகிவருகின்றது.

முன்னர் மைத்திரியை துரோகியென்ற எம்.ஏ.சுமந்திரன் அவரது யாழ்.வருகையின் போது பின்புறம் துரத்தி துரத்தி சென்று ஒட்டிக்கொண்டாலும் அவரது நிகழ்ச்சி நிரல் உள்ளுரில்  ஓய்வின்றியே உள்ளது.இதன் பிரகாரம் அவரது உதவியாளர்கள் தயாரித்துள்ள பட்டியல் பிரகாரம் வடமராட்சியிலுள்ள பல பாடசாலைகள் நாளை விடுமுறை தினத்திலும் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சுமந்திரனது நிதி ஒடுக்கீட்டில் வழங்கப்பட்டுள்ள உதவிகளை கையளிக்கவே நாளை விடுமுறை தினத்திலும் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளது. 

எவ்வாறேனும் ஜனாதிபதி கதிரையிலிருந்து விட யாழ்ப்பாண மாநகர நகர மண்டபத்துற்கான நிரந்தரக் கட்டிடத்திற்கான அடிக்கல்லை மூன்றாவது தடவையாக ரணில் விக்கிரம சிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டி வைக்க அவருக்கு இணையாக சுமந்திரனும் வீதிகளிற்கு கல்லுப்போட்டுவருகின்றமை கேலிக்குள்ளாகிவருதுகின்றது.

சுமந்திரனின் பயண வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாதவாறு ஏனைய கூட்டமைப்பினர் திண்டாடி வருகின்ற போதும் மக்களை சந்திக்காவிடினும் ஜனாதிபதி,பிரதமர் மற்றும் அமைச்சர்களது பயணங்களை தவறவிடாது புகைப்படங்களில் தோன்ற தவறவிடுவதில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments