மட்டக்களப்பிலும் தியாகி திலீபனுக்கு நினைவேந்தல்

மட்டக்களப்பில் தியாக தீபம் திலீபனின் 32ம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மண்டூர், கணேசபுரம் கண்ணகி விளையாட்டுக் கழக மைதானத்தில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது.

இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஜனநாயகப் போராளிகள் கட்சியியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், பொதுமக்கள், கட்சிகளின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments