"திலீபன் வழியில் வருகிறோம்" கொடிகாமத்தில்


'பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, அரசியல் கைதிகளை விடுதலை செய்!'

உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் கடந்த (21) தொடங்கிய "திலீபன் வழியில் வருகிறோம்" யாழ்ப்பாணம் நோக்கிய நடைபயணம் நான்காவது நாளான இன்று (25) கொடிகாமத்தை வந்தடைந்துள்ளது.

இன்று மிருசுவிலில் இருந்து குறித்த நடை பயணம் ஆரம்பமாகி ஏ-9 சாலை ஊடாக நாவற்குழி வரை சென்றடையவிருக்கின்றது.

இன்றைய நடை பயணத்தின் போது கொடிகாமத்தில் காலை 09 மணி முதல் 10 மணிவரை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து சாவகச்சேரியில் 11 மணி முதல் 01 மணி வரைக்கும், கைதடியில் மாலை 03 மணி முதல் 04 மணி வரை, அஞ்சலி செலுத்தமுடியும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனியின் இளைஞர் அணி தெரிவித்தது.


No comments